
பிலாஸ்பூர்: சத்தீஸ்கரில் உள்ள பிலாஸ்பூர் ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது, பயணிகள் ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று (நவம்பர் 4) மாலை 4 மணியளவில் மெமு பயணிகள் ரயில் கோர்பா மாவட்டத்திற்கு அருகிலுள்ள கெவ்ராவிலிருந்து பிலாஸ்பூருக்குச் சென்று கொண்டிருந்தபோது, நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளதாகவும், 20 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

