டெல்லி: விவாதத்தின் போது அமித் ஷாவிடம் சர்ச்சைகளுக்கான விதைகளை விதைக்கிறீர்கள் என்று அவையில் மல்லிகார்ஜூன கார்கே கடுமையாக கூறினார். நாடாளுமன்ற இரு அவைகளிலும் வக்பு திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது குறித்து சிபிஐ-எம் எம்பி ஜான் பிரிட்டாஸ் அளித்தி பேட்டியில், ‘இந்திய வரலாற்றில் சோகமான அத்தியாயம் ஒன்று எழுதப்பட்டது. இரு குழுக்களிடையே போட்டியை தூண்டும் இதுபோன்ற அடக்குமுறை நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வேண்டும். நாட்டின் அரசியலமைப்பு விதிகளை மீறப்பட்டுள்ளதால், இந்த சட்டதை்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முறையிட வாய்ப்புள்ளது’ என்றார். முன்னதாக மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே அவையில் பேசுகையில், ‘வக்பு திருத்த சட்ட மசோதாவை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா திரும்ப ெபற வேண்டும்.
இந்த மசோதா அரசியலமைப்புக்கு எதிரானது. நீங்கள் செய்வது நல்லது அல்ல. இதுபோன்ற மசோதா சர்ச்சைகளுக்கு வழிவகுக்கும். சர்ச்சைகளுக்கான விதைகளை விதைக்கிறீர்கள். எனவே மீண்டும் மீண்டும் கூறுகிறேன்… மசோதாவை திரும்ப பெறுங்கள். கவுரவப் பிரச்னையாக உருவாக்காதீர்கள். தவறுகளை சரி செய்வதற்கான வழி காண வேண்டும். இந்த மசோதா முஸ்லிம்களுக்கு பயன் அளிக்கக் கூடியது அல்ல. இந்த மசோதா சிறுபான்மையினரை தொந்தரவு செய்ய கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 1995ம் ஆண்டு சட்டத்தில் சில மாற்றங்கள் கொண்டு வந்திருந்தால் நாங்கள் அதை ஏற்றுக்கொண்டிருப்போம். ஆனால் அவ்வாறு மசோதாவில் குறிப்பிடவில்லை. இந்த மசோதாவில் குறைபாடுகள் உள்ளன’ என்று கூறினார்.
The post சர்ச்சைகளுக்கான விதைகளை விதைக்கிறீர்கள்: அமித் ஷாவிடம் கார்கே ஆவேசம் appeared first on Dinakaran.