நடிகை த்ரிஷா, தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்துள்ள ‘தக் லைஃப்’, அஜித்குமாரின் ‘குட் பேட் அக்லி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் நடித்து 2005-ம் ஆண்டு வெளியான படம் வித்தியாசமான சாதனையை படைத்துள்ளது.
மகேஷ் பாபு ஜோடியாக த்ரிஷா நடித்து வெளியான தெலுங்கு படம் ‘அத்தடு’. த்ரி விக்ரம் னிவாஸ் இயக்கிய இந்தப் படம் பஞ்ச் வசனங்களுடனும் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடனும் கமர்ஷியல் கதையாக வெளி யானது. இந்தப்படம், ஸ்டார் மா சேனலில் இதுவரை 1500 முறை ஒளிபரப்பாகி சாதனை படைத்துள்ளது.