ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான், ராஷ்மிகா மந்தனா, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சிக்கந்தர்’. வரும் ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாகும் இப்படத்தினை சாஜித் நாடியாவாலா தயாரித்துள்ளார். இப்படத்தின் மூலம் இந்தி திரையுலகில் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் அறிமுகமாகிறார். இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ட்ரெய்லர் எப்படி? – 3 நிமிடங்கள் 38 வினாடிகள் ஓடக்கூடிய நீண்ட ட்ரெய்லரில் முழுக்க மாஸ், ஆக்‌ஷன் மட்டுமே இடம்பெற்றுள்ளன. ஒரு சக்திவாய்ந்த அரசியல்வாதிக்கும், ஹிரோவுக்கும் இடையே நடக்கும் மோதலே பிரதான கதையாக இருக்கலாம். ஹீரோவின் மனைவியாக ராஷ்மிகா வருகிறார். காஜல் அகர்வால் ஒரு இடத்தில் வருகிறார். நீளமான ட்ரெய்லராக இருந்தாலும் கதை இதுவாகத்தான் இருக்கும் என்று யூகிக்க இயலவில்லை.