சென்னை: ஜோலார்பேட்டையில் சிக்னலிங் உள்கட்டமைப்பு மேம்படுத்துதல் தொடர்பான பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தப் பணிகளை எளிதாக்குவதற்காக, ஒரு ஜோடி ரயில் சேவைகள் பகுதியளவு ரத்து செய்யப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில் எண் 56108 ஈரோடு – ஜோலார்பேட்டை ரயில்: ஈரோட்டிலிருந்து காலை 06.00 மணிக்கு புறப்பட திட்டமிடப்பட்ட இந்த ரயில், 29 மற்றும் 30 மார்ச் 2025 ஆகிய தேதிகளில் (3 நாட்கள்) திருப்பத்தூர் – ஜோலார்பேட்டை இடையே பகுதியளவு ரத்து செய்யப்படும். இந்த ரயில் ஈரோட்டிலிருந்து திருப்பத்தூர் வரை மட்டுமே இயக்கப்படும்.
ரயில் எண் 56107 ஜோலார்பேட்டை – ஈரோடு ரயில்: ஜோலார்பேட்டையிலிருந்து பிற்பகல் 14.45 மணிக்கு புறப்பட திட்டமிடப்பட்ட இந்த ரயில், 9 மற்றும் 30 மார்ச் 2025 ஆகிய தேதிகளில் (3 நாட்கள்) ஜோலார்பேட்டை – திருப்பத்தூர் இடையே பகுதியளவு ரத்து செய்யப்படும். இந்த ரயில் திருப்பத்தூரிலிருந்து புறப்பட்டு ஈரோடு வரை இயக்கப்படும்.
28.03.2025 அன்று ஈரோடு – கரூர் – திருச்சி தடத்தில் ரயில் சேவைகளில் மாற்றங்கள்: சேலம் ரயில்வே கோட்டம் அறிவிப்பு
ரயில் எண் 56809 திருச்சிராப்பள்ளி – ஈரோடு பயணிகள் ரயில்: திருச்சிராப்பள்ளி சந்திப்பிலிருந்து காலை 07.20 மணிக்கு புறப்பட திட்டமிடப்பட்ட இந்த ரயில், 28 மார்ச் 2025 அன்று கரூர் சந்திப்பு வரை மட்டுமே இயங்கும். அன்று கரூர் சந்திப்பிலிருந்து ஈரோடு சந்திப்பு வரை இயங்காது.
ரயில் எண் 16845 ஈரோடு – செங்கோட்டை எக்ஸ்பிரஸ்: ஈரோடு சந்திப்பிலிருந்து பிற்பகல் 14.00 மணிக்கு புறப்பட திட்டமிடப்பட்ட இந்த ரயில், 28 மார்ச் 2025 அன்று கரூர் சந்திப்பிலிருந்து பிற்பகல் 15.05 மணிக்கு புறப்படும். இந்த ரயில் ஈரோடு சந்திப்பிலிருந்து கரூர் சந்திப்பு வரை இயங்காது; கரூர் சந்திப்பிலிருந்து புறப்பட்டு செங்கோட்டை வரை இயக்கப்படும்.
ரயில் எண் 16846 செங்கோட்டை – ஈரோடு எக்ஸ்பிரஸ்: செங்கோட்டையிலிருந்து காலை 05.10 மணிக்கு புறப்பட திட்டமிடப்பட்ட இந்த ரயில், 28 மார்ச் 2025 அன்று கரூர் சந்திப்பு வரை மட்டுமே இயங்கும். அன்று கரூர் சந்திப்பிலிருந்து ஈரோடு சந்திப்பு வரை இயங்காது.
ரயில் எண் 16843 திருச்சிராப்பள்ளி – பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ்: திருச்சிராப்பள்ளி சந்திப்பிலிருந்து பிற்பகல் 13.00 மணிக்கு புறப்பட திட்டமிடப்பட்ட இந்த ரயில், 28 மார்ச் 2025 அன்று கரூர் சந்திப்பு வரை மட்டுமே இயங்கும். அதே சமயம் புகலூரில் பணிகள் முடிந்த பிறகு, இந்த ரயில் கரூரிலிருந்து பாலக்காடு டவுன் வரை முன்பதிவு இல்லாத சிறப்பு ரயிலாக (Unreserved Special Train) இயக்கப்படும். என தெரிவித்துள்ளது.
The post சிக்னலிங் உள்கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் ஈரோடு – ஜோலார்பேட்டை ரயில் சேவைகள் பகுதியளவு ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.