புவனேஷ்வர்: ஒடிசாவில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி பிஷ்னுபடா சேதி. இவர் ரூ.10லட்சம் லஞ்சம் பெற்றதாக சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து புவனேஷ்வரில் உள்ள அவரது வீட்டை சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை செய்தனர். அப்போது சேதி அவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் முன்னிலையிலேயே செய்தியாளர்களை சந்தித்த பிஷ்னுபடா சேதி, ‘‘எனக்கு எதிராக எந்த எப்ஐஆர் பதிவும் இல்லாதபோதிலும், சிபிஐ அதிகாரிகள் தேவையில்லாமல் எனது வீட்டில் சோதனை நடத்தினார்கள். அவர்கள் தேவையில்லாமல் எனக்கு தொல்லைக்கொடுக்கிறார்கள். சிபிஐ அதிகாரிகள் முன் அறிவிப்பு இன்றி என் வீட்டை சோதனை செய்ய வந்தார்கள். 8 பேர் கொண்ட அந்த குழுவில் ஒரு பெண் அதிகாரி கூட இல்லை. எனது மனைவி மட்டுமே வீட்டில் இருந்தபோது ஆண் அதிகாரிகள் எனது வீட்டை சோதனை செய்தனர்” என்று தெரிவித்தார்.
The post சிபிஐயால் துன்புறுத்தப்பட்டேன்: மூத்த ஐஏஎஸ் அதிகாரி புகார் appeared first on Dinakaran.