டெல்லி: மக்களவையில் வக்ஃப் மசோதா மீதான விவாதத்தில் திமுக எம்.பி. ஆ.ராசா பேசினார். அப்போது; வக்ஃபு மசோதா குறித்து முழுமையான உண்மைகளை ஒன்றிய பாஜக அரசு கூறவில்லை. வக்ஃப் மசோதாவுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சிறுபான்மையினருக்கு எதிராகவும் அரசியல் சட்டத்துக்கு எதிராகவும் வக்ஃப் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் வக்ஃப் மசோதாவில் பிரதிபலிக்கவில்லை. அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கத்தின் போது சிறுபான்மையினர் நலன் குறித்த ஆலோசனைக் குழுவின் தலைவராக வல்லபாய் பட்டேல் இருந்தார். அரசியல்நிர்ணய சபைக்கு வல்லபாய் பட்டேல் அளித்த அறிக்கையை மேற்கோள்காட்டி ஆ.ராசா பேசினார்.
The post சிறுபான்மையினருக்கு எதிராக வக்ஃப் மசோதா உள்ளது: திமுக எம்.பி. ஆ.ராசா பேச்சு appeared first on Dinakaran.