புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வசதியாக இடைக்கால ஜாமீன் கோரி டெல்லி கலவர வழக்கில் தொடர்புடைய தாகிர்உசேன் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பங்கஜ் மித்தல், அஹ்சானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தாகிர் உசேன் வக்கீல் கூறுகையில்,’ டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஏஐஎம்ஐஎம் கட்சி சார்பில் தாகிர் உசேன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவர் மனுத்தாக்கல் செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் பரோல் வழங்கியது. பிப்.5ல் தேர்தல் நடைபெற உள்ளதால் பிப்.9 வரை இடைக்காலஜாமீன் வழங்க வேண்டும்’ என்று குறிப்பிட்டார். அப்போது நீதிபதிகள்,’சிறையில் அமர்ந்து கொண்டே தேர்தலில் வெற்றி பெறுவது எளிதாகிவிட்டது. அப்படிப்பட்டவர்கள் அனைவரும் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்க வேண்டும்’ என்று கருத்து தெரிவித்தனர்.
The post சிறையில் இருப்பவர்கள் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.