வரும் 31-ம் தேதி வரை பயன்படுத்தும் வகையில் காலக்கெடுவுடன் வழங்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரர்களுக்கான கட்டணமில்லா பயண அட்டையை ஜூன் 30-ம் தேதி வரை பயன்படுத்தலாம் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்கும் வகையில் மாற்றுத் திறனாளிகள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழறிஞர்கள் உள்ளிட்டோருக்கு பயண அட்டை வழங்கப்பட்டு வருகிறது.