ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி, ஊட்டிக்கு வார நாட்களில் 6.000 வாகனங்கள். வார இறுதி நாட்களில் 8,000 வாகனங்கள் மட்டுமே செல்ல முடியும். அதேபோன்று கொடைக்கானலுக்கு வார நாட்களில் 4,000 மற்றும் வார இறுதி நாட்களில் 6,000 வாகனங்கள் மட்டுமே செல்ல முடியும் என்ற உத்தரவு வரவேற்கத்தக்கது.
மலைவாசஸ்தலங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல். வன உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் சீர்கேடுகளை தடுக்கும் நோக்கத்துடன் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு கண்டிப்புடன் பின்பற்றப்பட வேண்டிய உத்தரவாகும். இந்த உத்தரவால் வியாபாரிகள் தங்கள் வியாபாரம் பாதிக்கப்படுவதாக குறைபட்டுக் கொள்வதற்கு வாய்ப்புள்ளது. இருந்தாலும் சுற்றுச்சூழல் நலன்கருதி அனைவரும் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கட்டுப்பட்டு நடப்பது அவசியம்.