இந்திய பங்குச் சந்தைகளில் வாரத்தின் முதல் வர்த்தக நாளான நேற்று கடும் சரிவு காணப்பட்டது. வர்த்தகத்தின் இடையே சென்செக்ஸ் 1,400 புள்ளிகள் வரை சரிந்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. நிப்டி 23,600 புள்ளிகளுக்கும் கீழ் சென்று வர்த்தகமானது.
காலையில் பங்குச் சந்தையின் தொடக்கம் நேர்மறையாக இருந்தபோதிலும் இறுதியில் 1.5 சதவீதத்துக்கும் மேல் சரிவை சந்தித்தது. சீனாவில் வேகமாக பரவி வரும் எச்எம்பி வைரஸ் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக வெளியான தகவல் சந்தைகளில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியது. இதுதவிர, வங்கி மற்றும் நுகர்வோர் துறை பங்குகளின் செயல்பாடு மிக மோசமானதாக இருந்ததும் சந்தை இந்த அளவுக்கு சரிய முக்கிய காரணமானது.