சென்னை: சென்னையிலிருந்து கர்நாடக மாநிலம் ஷிவமோகா புறப்பட்ட தனியார் விமானத்தில் எந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது. பிற்பகல் 2.50-க்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. ஓடுபாதையில் ஓடத்தொடங்கிய போது எந்திரக் கோளாறு ஏற்பட்டதால் விமானம் ஓடுபாதையில் நிறுத்தம் செய்யப்பட்டது. விமானத்தில் இருந்த 85 பயணிகள் உட்பட 90 பேர் மாற்று விமானம் மூலம் ஷிவமோகாவுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
The post சென்னையிலிருந்து கர்நாடக மாநிலம் ஷிவமோகா புறப்பட்ட தனியார் விமானத்தில் எந்திரக் கோளாறு..!! appeared first on Dinakaran.