சென்னை: ஜார்க்கண்ட், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடியின இளைஞர்கள் பங்கேற்கும் 16-வது பழங்குடியின இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சியை வரும் 8-ம் தேதி சென்னையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைக்கிறார்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில இயக்குநர் செந்தில்குமார் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: பழங்குடியின மக்கள் தனித்துவமான கலாச்சாரங்கள் கொண்டவர்களாகவும் பிற சமூகங்களுடன் தொடர்பு கொள்ள கூச்சப்படுபவர்களாகவும், பொருளாதார நிலையில் பின்தங்கியவர்களாகவும் உள்ளனர். இதனால், பல இளைஞர்கள் தவறான வழியில் செல்கின்றனர்.