டெல்லி: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீராமை ராஜஸ்தானுக்கு மற்ற உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. தற்போது உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றிய நீதிபதி சஞ்சீவ் கண்ணா கடந்த 13ம் தேதி ஓய்வு பெற்றார். இதேபோல், உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளில் ஒருவரான அபய் எஸ்.ஓகா கடந்த 24ம் தேதி ஓய்வு பெற்றார். இதனால் நிர்ணயம் செய்யப்பட்ட உச்ச நீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 34ல் இருந்து 31ஆக குறைந்துள்ளது.
இந்நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையில் முதல் கொலீஜியம் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உச்சநீதிமன்றத்திற்கு 3 புதிய நீதிபதிகளை நியமிக்க பரிந்துரைக்கப்பட்டது. அதில், கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.அஞ்சாரியா, ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி விஜய் பிஷ்னோய் மற்றும் மும்பை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி ஏ.எஸ் சந்துர்கர் உள்ளிட்ட 3 பேரை உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவை ஏற்கப்படும் பட்சத்தில் உச்ச நீதிமன்றம் நிர்ணயம் செய்யப்பட்ட முழு நீதிபதிகளுடன் செயல்படும்.
மேலும், சென்னை உயர்நீதிமன்றம் உள்பட 4 உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளை நியமிக்க பரிந்துரைக்கப்பட்டது. அதேபோன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் 22 பேரை பணியிடமாற்றம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீராமை ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளார். ராஜஸ்தான் ஐகோர்ட் தலைமை நீதிபதி ஸ்ரீவத்சவாவை சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரைத்துள்ளது. இவர் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீராமை ராஜஸ்தானுக்கு மற்ற உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை..!! appeared first on Dinakaran.