டெல்லி: சென்னையை சேர்ந்த பிரதீஷா என்பவர், கடந்த 2019ம் ஆண்டு நடந்த விபத்தில் படுகாயமடைந்தார். அவர் பயணித்த வேன் மீது லாரி மோதியதில் பிரதீஷா படுகாயமடைந்தார். அவருக்கு 50 சதவீதம் உடல் ஊனம் ஏற்பட்டது. அதேவேளையில் அவருடன் பயணித்த அவரது தாயார் உயிரிழந்தார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பிரதீஷாவுக்கு ரூ.1.72 லட்சம் காப்பீட்டு இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக பிரதீஷா, தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்ற நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அவர் பிறப்பித்த உத்தரவில், ”விபத்து காரணமாக பிரதீஷா கல்வியை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வேலைவாய்ப்பு, வாழ்க்கைக்கான பாதுகாப்பு என பல்வேறு இழப்புகளை அவர் சந்தித்துள்ளார். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றம் தனி அதிகாரத்தை பயன்படுத்தி ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கிறோம்’ எனக்கூறி வழக்கை முடித்து வைத்தனர்.
The post சென்னை பெண்ணுக்கு ரூ.15 லட்சம் வழங்க காப்பீட்டு நிறுவனங்களுக்கு உத்தரவு: உச்ச நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.