சென்னை: சென்னை வளசரவாக்கத்தில் 6 வயது சிறுவனை கடித்து குதறிய வளர்ப்பு தெருநாயால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தந்தையுடன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை பக்கத்து வீட்டில் வளர்க்கும் தெருநாய் கடித்து குதறியது. சிறுவனுக்கு காது, கை, முகம் என பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிகப்பட்டுள்ளான்.
குறிப்பாக சென்னை வளசரவாக்கம் அடுத்த காரம்பாக்கம் ஸ்ரீராம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் இவரது மகன் லோகேஷ்(6) ஆவார். லோகேஷ் தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இரவு வீட்டின் அருகே தந்தையுடன் விளையாடி கொண்டிருந்த சிறுவன் மீது பக்கத்து வீட்டில் வளர்க்கப்படும் தெரு நாய் பாய்ந்து கடித்துள்ளது. இதில் இருந்து தப்பிக்க சிறுவன் ஒடியபோதும் காது, கை, முகம் என பல்வேறு இடங்களில் கடித்துள்ளது. இதனால் அதிர்ச்சிக்குள்ளான பெற்றோர் சிறுவனை மீட்டு எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதில் சிறுவனின் காதுக்கு பின்னல் நான்கு தையல்கள் போடப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர்கள் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் அதிகப்படியான தெரு நாய்கள் இருப்பதாகவும் அடிக்கடி புகார் அளித்தும் மாநகராட்சி அதிகாரிகள் தெருநாய்களை ஒழிக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர்.
The post சென்னை வளசரவாக்கத்தில் 6 வயது சிறுவனை கடித்து குதறிய வளர்ப்பு தெருநாய் appeared first on Dinakaran.