மும்பை: பங்குச் சந்தை பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) தலைவராக இருந்த மாதவி புரி புச் மீது வழக்கு பதிவு செய்ய மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
பங்குச் சந்தை விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த ஊழல் தடுப்புசிறப்பு நீதிமன்ற நீதிபதி சசிகாந்த் ஏக்நாத்ராவ் பங்கர் சனிக்கிழமை பிறப்பித்த உத்தரவு: தவறு நடந்திருப்பது முதல்கட்ட ஆதாரங்களில் தெளிவாக தெரிகிறது. எனவே, மாதவி புரி புச், 5 அதிகாரிகளுக்கு எதிராக ஊழல் தடுப்பு அமைப்பு (ஏசிபி) முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும். இந்த விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்கும். 30 நாட்களுக்குள் ஏசிபி தனது நிலை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார். இதனிடையே, தனது தரப்பு வாதத்தை முன்வைக்க வாய்ப்பு அளிக்கப்படவில்லை என கூறியுள்ள செபி, இந்த உத்தரவுக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளது.