‘ஜன நாயகன்’ படத்தின் ஒரு காட்சியில் விஜய்யின் முந்தைய படங்களின் இயக்குநர்கள் நடித்திருக்கிறார்கள்.
விஜய் நடித்து வரும் ‘ஜன நாயகன்’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் விஜய் – பாபி தியோல் இருவரும் பங்கேற்ற சண்டைக் காட்சி ஒன்றை பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். தற்போது இப்படத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு காட்சி ஒன்று இருக்கிறது. அதில் விஜய்யிடம் கேள்வி கேட்கும் நபர்களாக லோகேஷ் கனகராஜ், அட்லி மற்றும் நெல்சன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். விஜய் நடிப்பில் உருவாகும் கடைசிப் படம் என்பதால் இதில் நடிக்க சம்மதம் தெரிவித்து நடித்துள்ளனர்.