ராம்பன்: ஜம்மு காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் இருந்து ராணுவ வாகனம் வீரர்களை ஏற்றி கொண்டு நகர் நோக்கி சென்று கொண்டிருந்தது. நேற்று காலை ஜம்மு – நகர் தேசிய நெடுஞ்சாலையில் பெட்டரி ஜெஷ்மா என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் அங்கிருந்த 700 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
The post ஜம்முவில் 700 அடி பள்ளத்தில் ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்து: 3 வீரர்கள் பலி appeared first on Dinakaran.