ஜம்முகாஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இரவு முழுவதும் தொடர்ந்து குண்டு வெடிப்பு சத்தம் கேட்டுக் கொண்டேயிருந்ததால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஜம்மு- காஷ்மீரின் 5 எல்லையோர மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து முதல்வர் உமர் அப்துல்லா ஆறுதல் தெரிவித்தார்.
The post ஜம்மு- காஷ்மீரின் 5 எல்லையோர மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம் appeared first on Dinakaran.