கவுகாத்தி: ஜம்மு காஷ்மீர் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய அசாம் மாநில எதிர்க்கட்சி எம்எல்ஏ அமினுல் இஸ்லாம் கைது செய்யப்பட்டார். ஜம்மு காஷ்மீரில் கடந்த செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அசாமில் ஏஐடியுஎப் எதிர்க்கட்சியை சேர்ந்த பேரவை உறுப்பினர் அமினுல் இஸ்லாம் ஜம்மு காஷ்மீர் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு உள்ள தொடர்புக்கு ஆதரவாக பேசும் காணொலியை வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அந்த காணொலியை தான் பார்த்ததாகவும் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறி உள்ளார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கு முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா அறிவுறுத்தி உள்ளார். இதையடுத்து தேசத்துரோக குற்றச்சாட்டில் அமினுல் இஸ்லாம் நேற்று கைது செய்யப்பட்டார்.
The post ஜம்மு காஷ்மீர் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய அசாம் எம்எல்ஏ கைது appeared first on Dinakaran.