ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் அனந்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் பைசர் பள்ளத்தாக்கிற்கு 40க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சென்று இருந்தனர். குதிரை சவாரியை இயற்கை அழகை ரசித்து கொண்டிருந்தபோது பிற்பகல் 2.30 மணியளவில் ராணுவ சீருடையில் வந்த பயங்கரவாதிகள் திடீரென தானியங்கி துப்பாக்கியால் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் சுற்றுலா வந்த நேபாளம் மற்றும் ஐக்கிய அரசு அமீரக நாட்டை சேர்ந்த இருவர் இந்திய கடற்படை அதிகாரி உட்பட 28 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் கர்நாடக, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பைசரான் பகுதிக்கு செல்ல போதிய சாலை வசதி மற்றும் போக்குவரத்து இல்லாததால் அங்கிருந்தவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பாதுகாப்புப் படையினர் பைசரான் பகுதியில் இருந்தவர்களை ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்டனர். அவர்களில் படுகாயம் அடைந்த 12 பேர் பஹல்காம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களில் முதற்கட்டமாக 16 பேரின் பெயர் விவரம் தெரியவந்துள்ளது.
1.மஞ்சுநாத் (கர்நாடகா),
2.வினய் நர்வால் (ஹரியானா)
3.சுபம் திவேதி (உ.பி.)
4.திலீப் ஜெயராம்
5.சந்தீப் (நேபாளம்),
6.பிடன் அதிகேரி,
7.உத்வானி பிரதீப் (அமீரகம்)
8.அதுல் ஸ்ரீகாந்த் (மராட்டியம்)
9.சஞ்சய்,
10. சையது உசேன்(காஷ்மீர்),
11.ஹிமத் (சூரத்).
12.பிரசாந்த் குமார்,
13.மணீஷ் ரஞ்சன்
14.ராமச்சந்திரம்,
15. ஷாலிந்தர்,
16. ஷிவம் மோகா(கர்நாடகா) ஆகியோர் உயிரிழந்தாக ராணுவம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் காயமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேரின் விவரம் தெரியவந்துள்ளது. மருத்துவர் பரமேஸ்வரன் (31) (சென்னை), சந்துரு(83), பாலச்சந்திரா(57) ஆகியோருக்கு அனந்நாக் மருத்துவனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
The post ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தோர் விவரம் வெளியீடு.. தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேர் காயம்: பெயர் வெளியீடு!! appeared first on Dinakaran.