ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலத்தில் 6 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. ஜார்க்கண்ட்மாநிலம் பொகாரோ மாவட்டத்தின் லால்பானியா பகுதியில் உள்ள லுகு மலைப் பகுதிகளில் நக்சல்கள் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட ரிசர்வ் போலீஸார் (டிஆர்ஜி), சிஆர்பிஎஃப் துணை ராணுவப் படையின் ஒரு பிரிவான கோப்ரா கமாண்டோ பிரிவினர் ஆகியோர் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது பதுங்கி இருந்த நக்சலைட்கள், போலீஸாரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். பதிலுக்குப் போலீஸாரும் துப்பாக்கியால் சுட்டனர். சண்டை ஓய்ந்ததும் அங்கு போலீஸார் தேடியபோது 6 நக்சல்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. மேலும், சம்பவ இடத்திலிருந்து AK-47 துப்பாக்கி மற்றும் SLR துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டன.தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருகின்றன.சமீபகாலமாக, சத்தீஸ்கர், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கைகளை பாதுகாப்புப் படையினர் தீவிரப்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
The post ஜார்கண்ட் மாநிலத்தில் லுகு மலைப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினரால் 6 நக்சல்கள் சுட்டுக் கொலை!! appeared first on Dinakaran.