புதுடெல்லி: அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை விவசாய பிரதிநிதிகளுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில் பாரதிய கிஸான் சங்கத்தின் பொதுச் செuலாளர் பத்ரி நாராயண் சவுத்ரி பேசுகையில், “பி.எம். கிஸான் திட்டப் பலன்களை அதிகரிக்க வேண்டும்” என்றார். பாரதிய கிஸான் யூனியன் தேசிய செய்தித் தொடர்பாளர் தர்மேந்திர மாலிக் பேசும் போது, “விவசாயத் துக்கு தீவனம், உரம், விதைகள். கருவிகள், மருந்துகள் உட்பட அனைத்து பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.