திருவனந்தபுரம்: கேரள மாநிலம் காசர்கோடு அருகே ஜூசில் மது கலந்து கொடுத்து மயக்கி இளம்பெண்ணை ஆபாச வீடியோ எடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள வடகரை பகுதியைச் சேர்ந்தவர் முகம்மது ஜாஸ்மின் (28). சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் காசர்கோடு அருகே உள்ள சந்தேரா பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. கணவனைப் பிரிந்து வாழும் அவருக்கு 16 வயதில் ஒரு மகன் உண்டு. இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான அவர்கள் நேரிலும் சந்திக்கத் தொடங்கினர். மேலும் முகம்மது, இளம்பெண்ணின் வீட்டுக்கு அடிக்கடி சென்று தங்கி வந்து உள்ளார்.
இந்தநிலையில் ஒரு நாள் இளம்பெண்ணுக்கு அவர் ஜூசில் மது கலந்து கொடுத்து உள்ளார். இதை குடித்தவுடன் மயங்கிய அவரை முகமது தன்னுடைய செல்போனில் ஆபாச வீடியோ எடுத்துள்ளார். அதன் பிறகு வீடியோவை உறவினர்களுக்கு அனுப்பி வைப்பேன் என்று கூறி இளம்பெண்ணை முகம்மது மிரட்டி பலாத்காரம் செய்து வந்துள்ளார். மேலும் அந்த வீடியோவை இளம்பெண்ணின் மகனுக்கு அனுப்பி வைத்து உள்ளார். இதுகுறித்து இளம்பெண் சந்தேரா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் வெளிநாடு தப்பிச் செல்ல இருந்த அவரை கோழிக்கோடு விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.
The post ஜூசில் மது கலந்து கொடுத்து இளம்பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பலாத்காரம்: வாலிபர் கைது appeared first on Dinakaran.