சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் ஜான்லூயிஸ் வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் (பட்டயம், தொழிற்பயிற்சி நிலை)-ன் நேரடி நியமனத்திற்கான அறிவிக்கையை 13.8.2024 அன்று வெளியிட்டது.
இத்தெரிவிற்கான தேர்வுகள் கடந்த 9.11.2024, 11.11.2024, 16.11.2024, 19.1.2025 மற்றும் 17.2.2025 ஆகிய தேதிகளில் நடந்தன. இத்தெரிவில் உயர் நீதிமன்றத்தின் இடைக்கால ஆணையின்படி அளவர், நில அளவர், வரைவாளர், வரைவாளர் (கிரேடு 3), அளவர் மற்றும் உதவி ஆணையர் பதவிகளின் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. மீதமுள்ள பதவிகளுக்கான மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in-ல் இருவழி தொடர்பு முறையில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் ஒருங்கிணைந்த தொழில்நுட்பபணி தேர்வு முடிவுகள் appeared first on Dinakaran.