புதுடெல்லி: இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை டிஜிட்டல் மோசடிகளுடன் தொடர்புடைய 7.81லட்சத்துக்கும் மேற்பட்ட சிம்கார்டுகள் முடக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் பண்டி சஞ்சய் குமார் கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலில், ‘‘காவல்துறையால் புகாரளிக்கப்பட்ட மொத்தம் 2,08,469 ஐஎம்ஈஐ எண்கள் ஒன்றிய அரசினால் முடக்கப்பட்டுள்ளது.
மேலும் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் டிஜிட்டல் கைதுகளுக்காக பயன்படுத்தப்படும் 3,962க்கும் மேற்பட்ட ஸ்கைப் ஐடிகள் மற்றும் 83,668 வாட்ஸ்அப் கணக்குகளை முன்கூட்டியே கண்டறிந்து முடக்கியுள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி வரை டிஜிட்டல் மோசடிகளுடன் தொடர்புடைய 7.81லட்சத்திற்கும் மேற்பட்ட சிம் கார்டுகளை சட்ட அமலாக்க முகமைகள் முடக்கியுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
The post டிஜிட்டல் மோசடி 7.81 லட்சம் சிம் கார்டு, 83 ஆயிரம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம் appeared first on Dinakaran.