டெல்லி: டெல்லி பகார்கஞ்ச் பகுதியில் உள்ள ராம் நகர் பகுதியை சேர்ந்த 2 வயது சிறுமி அனாதியா. இச்சிறுமி நேற்று மாலை தனது வீட்டின் முன் விளையாடி கொண்டிருந்தபோது, பக்கத்துக்கு வீட்டை சேர்ந்த 15 வயது சிறுவன், தனது தந்தையின் காரை இயக்கிய போது சிறுமி அனாதியா மீது காரை ஏற்றியுள்ளார்.
கார் டயருக்கு அடியில் சிக்கிய சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கண்டவர்கள் உடனடியாக ஓடி சென்று காரை பின்னுக்கு தள்ளி சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து பாரதிய நியாய சங்கத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், கவனக்குறைவாக வாகனத்தை இயக்கி விபத்து ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுவனையும், அவனின் தந்தையையும் போலீசார் கைது செய்தனர். நேற்று ரம்ஜான் கொண்டாடப்பட்ட நிலையில் சிறுமியின் உயிரிழப்பு பெற்றோருக்கு துயரைத்தை ஏற்படுத்தியுள்ளது.
The post டெல்லியில் 15 வயது சிறுவன் கார் ஏற்றியதில் 2 வயது குழந்தை பலி! appeared first on Dinakaran.