புதுடெல்லி: கட்டுக்கட்டாக பணம் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில், டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கான நீதித்துறை பணிகள் நிறுத்திவைக்கப்படுவதாக டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், "நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் நீதித்துறைப் பணிகள், அவரிடம் இருந்து திரும்பப் பெறப்படுகிறது. இது உடனடியாக அமலுக்கு வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.