டெல்லி: குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். உடல்நலக்குறைவு காரணமாக குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
73 வயதான தன்கருக்கு மார்ச் 9ம் தேதி அதிகாலை 2 மணியளவில் திடீரென நெஞ்சுவலியும், உடல் அசைவுகர்யமும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும், ஜக்தீப் தங்கரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவர்கள் அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று அவர் டிஸ்சார்ஜ் ஆனார். AIIMS இல் மருத்துவக் குழுவினரால் தேவையான சிகிச்சையைப் பெற்ற பிறகு, அவர் திருப்திகரமான குணமடைந்து மார்ச் 12, 2025 அன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அடுத்த சில நாட்களுக்கு போதுமான ஓய்வு எடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்
The post டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் appeared first on Dinakaran.