புதுடெல்லி: டெல்லி சட்டபேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பாஜ மற்றும் காங்கிரஸ் கட்சிகளை குறி வைத்து நேர்மையற்றவர்கள் என்ற போஸ்டரை வெளியிட்டுள்ளது. அதில், பிரதமர் மோடி,உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பாஜ முக்கிய தலைவர்களுடன் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் பெயரும் இடம்பெற்றுள்ளதால் காங்கிரஸ் கடும் அதிருப்தி அடைந்துள்ளது. இந்தியா கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் இந்த செயலுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய டெல்லி காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான அல்கா லம்பா, ‘அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தைரியம் இருந்தால் இந்தியா கூட்டணியை விட்டு விலக வேண்டும். காங்கிரஸ் 100 எம்பிக்களுடன் வலுவான நிலையில் நிற்கிறது. டெல்லியில் 7 மக்களவை தொகுதிகளை காங்கிரசுக்கு கொடுத்தவர் கெஜ்ரிவால். மக்களவை தேர்தலில் ஆம் ஆத்மியுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்தது மிக பெரிய தவறு. இதனால் பெரும் இழப்பை சந்திக்க நேரிட்டது என்றார். இந்த போஸ்டர் விவகாரத்தால் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே கடும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
The post டெல்லி தேர்தலில் ஆம்ஆத்மி அதிரடி; நேர்மையற்றவர்கள் பட்டியலில் ராகுல்: காங்கிரஸ் ஆவேச கேள்வி appeared first on Dinakaran.