பெங்களூரு: தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ரன்யா ராவின் ஜாமீன் மனுவை, பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இந்த வழக்கின் இரண்டாவது குற்றவாளியான தருண் ராஜு 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
கர்நாடக போலீஸ் டிஜிபி ராமசந்திர ராவின் வளர்ப்பு மகளும், நடிகையுமான ரன்யா ராவ் (32) துபாயில் இருந்து 14.8 கிலோ தங்கம் கடத்தி வந்ததாக கடந்த 3-ம் தேதி பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள், அவரது வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.2.67 கோடி ரொக்கப்பணம், ரூ.2.06 கோடி மதிப்பிலான தங்க நகைகளை கைப்பற்றினர்.