பெங்களூரு: நடிகை ரன்யா ராவ் மீதான தங்கக் கடத்தல் வழக்கில் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் நேற்று பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தினர். அதில் ரூ.2.67 கோடி ரொக்கப் பணமும், ரூ.2.06 கோடி மதிப்பிலான தங்கமும் சிக்கியுள்ளது.
கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவை சேர்ந்தவர் நடிகை ரன்யா ராவ்(32). கர்நாடக போலீஸ் டிஜிபி ராமச்சந்திர ராவின் வளர்ப்பு மகளான இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் நடிகர் விக்ரம் பிரபு நடித்த ‘வாகா’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ந‌டித்துள்ளார்.