பெங்களூரு: கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவை சேர்ந்த நடிகை ரன்யா ராவ் (32), கர்நாடக போலீஸ் டிஜிபி ராமசந்திர ராவின் வளர்ப்பு மகளாவார். இவர் கடந்த 3ம் தேதி துபாயில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் வந்த அவரிடம் 14.8 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து பெங்களூருவில் ரன்யா ராவின் வீட்டில் நடந்த சோதனையில் ரூ.2.67 கோடி ரொக்கம், ரூ.2.06 கோடி மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் ரூ.17 கோடி மதிப்பிலான சொத்துகளின் ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.
மேலும் அவரை 3 நாட்கள் காவலில் எடுத்து வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர் விசாரணையில் அவர் இதுவரை 45 நாடுகளுக்கு பயணித்தது தெரியவந்துள்ளது. ரன்யா ராவ் மீதான இவ்வழக்கில் முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானதால், அமலாக்கத்துறை அதிகாரிகள் இவ்வழக்கை கவனிக்க தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளின் காவலில் இருக்கும் ரன்யா ராவின் முகத்தில் காயமும், அவரது கண்கள் வீங்கிய புகைப்படங்கள் வைரலாகிறது. அவர் போலீசாரால் தாக்கப்பட்டிருக்கலாம் என்ற ஊகங்கள் எழுந்துள்ளன. கர்நாடக மாநில மகளிர் ஆணையத் தலைவர் நாகலட்சுமி சவுத்ரிஅறிக்கையில், ‘ரன்யா ராவின் முகத்தில் காயங்கள் இருப்பதை பார்க்கும் போது அவர் தாக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அவ்வாறு நடந்திருந்தால், அதனை கண்டிக்கிறேன். முறையான புகார் அளிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
The post தங்க கடத்தல் வழக்கில் கைதான நடிகை ரன்யாராவ் தாக்கப்பட்டாரா? கண்கள் வீங்கிய படம் வெளியானதால் சர்ச்சை appeared first on Dinakaran.