டெல்லி : வலி நிவாரணத்திற்கு பயன்படுத்தப்படும் நிமெசலைட் மருந்து தடை செய்யப்பட்ட நிலையில், சட்டவிரோத விற்பனை குறித்து கண்காணிக்க மாநிலங்களுக்கு ஒன்றிய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. தீவிர காய்ச்சல் மற்றும் உடல் வலிக்கு நிமெசலைட் மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. வலி நிவாரணியாக செயல்பட்டாலும் அந்த மருந்தால் அதிக எதிர்விளைவுகள் உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக தலைவலி, வயிற்றுப்போக்கு, பார்வை குறைபாடு, கல்லீரல் பாதிப்பு ஆகிய விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த மருந்தை மனித பயன்பாடு மற்றும் கால்நடைகளின் பயன்பாட்டிற்கு தடை விதிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்ட நிலையில், நாடு முழுவதும் நிமெசலைட் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் அனைத்து மாநிலங்களுக்கும் அதன் உற்பத்தி மற்றும் விற்பனை சட்டவிரோதமாக நிகழாத வகையில், கண்காணிப்பு நடவடிக்கைகளையும் தடுப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும் என்று ஒன்றிய அரசின் மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தி உள்ளது.
The post தடை செய்யப்பட்ட வலி நிவாரணத்திற்கு பயன்படுத்தப்படும் நிமெசலைட் மருந்து குறித்து கண்காணிக்க மாநிலங்களுக்கு உத்தரவு!! appeared first on Dinakaran.