வத்நகர்: குஜராத்தில் பிரதமர் மோடியின் சொந்த ஊரான மெக்சானா மாவட்டத்தில் உள்ள வத்நகரில், பிரதமர் சிறுவயதில் படித்த பள்ளி மறுசீரமைக்கப்பட்ட உட்பட 3 முக்கிய திட்டங்களை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில்,‘‘உளவியலின் படி வறுமையிலும், பற்றாக்குறையான சூழ்நிலையிலும் குழந்தை பருவம் கழிந்தால் அது எதிர்மறையான சிந்தனையால் இயக்கப்படும் என்று கற்பிக்கப்படுகின்றது. அதுபோன்ற குழந்தைகள் அழிவுகரமான சிந்தனையை வளர்த்துக்கொண்டு பழிவாங்கும் உணர்வோடு வளர்கிறார்கள். ஆனால் ஏழை தேநீர் விற்பனையாளரின் குடும்பத்தில் பிறந்த மோடி ஜி, தனது வறுமையை ஏழை மக்கள் மீதான இரக்கமாக மாற்றினார்.
அந்த ஏழை குழந்தை மாநிலத்தின் முதல்வராக ஆட்சியை பிடித்தபோது அவர் மனதில் எந்த எதிர்மறையும் இல்லை. வேறு எந்த குழந்தையும் தான் எதிர்கொண்ட வறுமையை எதிர்கொள்ளக்கூடாது என்பதை உறுதி செய்வதற்காக நாடு முழுவதும் உள்ள ஏழைகளின் நலனுக்காக பாடுபட்டார்” என்றார்.
The post தனது வறுமையை ஏழை மக்கள் மீது இரக்கமாக மாற்றினார்: பிரதமர் மோடி குறித்து அமைச்சர் அமித் ஷா புகழாரம் appeared first on Dinakaran.