சென்னை: தமிழகத்தில் உள்ள கழுகுகளின் எண்ணிக்கை, அவற்றின் இனம், வாழ்விடம் குறித்து தமிழக வனத்துறை புள்ளி விவரங்களை சேகரித்துள்ளதாக வனத்துறை தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள கழுகுகள் இனம் அழிந்து வருவதை தடுக்கவும், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கழுகுகள் வாழ்விட மேம்பாடு மையங்களை உருவாக்கக்கோரியும் வண்டலூரைச் சேர்நத் சூர்யகுமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.