டெல்லி: கர்நாடகாவின் குடகு மாவட்டத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று ரெட் அலர்ட் தெரிவித்துள்ளது. மைசூரு உட்பட 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கான எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று மிக மிக பலத்த மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, கரூர், மதுரை, விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரள மாநிலத்தில் இன்று 5 மாவட்டங்களில் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கபப்ட்டுள்ளது. மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு, ஆகிய மாவட்டங்களில் இன்று அதிகனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து நாளை 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, திருச்சி, பெரம்பலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. டிச.4, 5, 6, ஆகிய தேதிகளில் எந்த வானிலை முன்னெச்சரிக்கையும் இல்லை.
The post தமிழகத்தில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று மிக மிக பலத்த மழைக்கான சிவப்பு எச்சரிக்கை: இந்திய வானிலை ஆய்வு மையம்..! appeared first on Dinakaran.