சென்னை: தமிழகத்தில் மார்ச் 3 ஆம் தேதி முதல் மார்ச் 6 ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2 – 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “பூமத்திய ரேகையை ஒட்டிய மேற்கு இந்தியப்பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் – மாலத்தீவு வரை ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மார்ச் 2 ஆம் தேதி தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.