திருவனந்தபுரம்: கேரள தொழில்துறை இயக்குனராக இருந்தவர் கே.கோபாலகிருஷ்ணன். 2013ம் ஆண்டு கேரளா கேடர் ஐஏஎஸ் அதிகாரியான இவரது சொந்த ஊர் நாமக்கல் ஆகும். இந்தநிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மல்லு இந்து ஆபீசர்ஸ் என்ற பெயரில் ஒரு வாட்ஸ் அப் குரூப்பை தொடங்கியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்த கேரள அரசு உத்தரவிட்டது. விசாரணையில் தன்னுடைய போனை யாரோ ஹேக் செய்து விட்டதாக கோபாலகிருஷ்ணன் கூறினார். இது தொடர்பாக அவர் திருவனந்தபுரம் நகர போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தார். ஆனால் போன் ஹேக் செய்யப்படவில்லை என்று விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கடந்த நவம்பர் 6ம் தேதி கோபாலகிருஷ்ணனை கேரள அரசு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. இதற்கிடையே கோபால கிருஷ்ணனின் சஸ்பெண்ட் உத்தரவை கேரள அரசு வாபஸ் பெற்றுள்ளது. விரைவில் அவருக்கு புதிய பதவி வழங்கப்படும்.
The post தமிழக ஐஏஎஸ் அதிகாரி சஸ்பெண்ட் உத்தரவு ரத்து appeared first on Dinakaran.