சென்னை: “தமிழகத்தில் பயிர் சாகுபடிக்கான குறுகியகால வேளாண் கடன் தேவைகளை நிறைவு செய்யும் பொருட்டு 2025-26 ஆம் ஆண்டில் 17 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பயிர்க்கடன் வழங்கப்படும்,” என்று வேளாண் பட்ஜெட்டில் வேளாண்மை மற்றும் உழவர் நலன் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் உழவர் நலன் மற்றும் வேளாண்மை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (மார்ச் 15) காலை தாக்கல் செய்தார். அவரது பட்ஜெட் உரையில் இடம்பெற்றுள்ள விசாயிகளுக்கான கடன் தொடர்பான அறிவிப்புகள் இங்கே…