டெல்லி: தமிழ்நாட்டில் ரூ.53.48 கோடியில் மேல்பால பணிகளை மேற்கொள்ள ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி ஒப்புதல் வழங்கியுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் ரூ.9.22 கோடியில் மேம்பாலம், தரைப்பாலம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி – தாராபுரம் – கரூர் சாலையில் மேம்பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஈரோடு – முத்தூர் – வெள்ளகோவில் – புதுப்பை சாலையில் தரைப்பாலம் அமைக்கவும் ஒப்புதல் வழங்கியுள்ளதாக நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
The post தமிழ்நாட்டில் மேம்பால பணிகளுக்கு ரூ.53.48 கோடி ஒப்புதல்: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி appeared first on Dinakaran.