டெல்லி:தமிழ்நாட்டில் 100 நாள் வேலைத் திட்டத்துக்கான ஊதியம் ரூ.17 உயர்த்தப்பட்டுள்ளது. 2025 -26 நிதியாண்டுக்கான ஊதியம் ரூ.336-ஆக நிர்ணயம் செய்து ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 2024-25 நிதியாண்டில் 100 நாள் வேலை திட்டத்தில் ஊதியமாக ரூ.319 வழங்கப்பட்டு வந்தது. இந்த அறிவிப்பின் படி தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 100 நாள் வேலை திட்டத்தில் தினசரி ஊதியம் 319 ரூபாயிலிருந்து 336 ரூபாயாக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் 25.25 கோடி பேர் பதிவு செய்துள்ளனர். இதில், 14.35 கோடி பேர் செயலில் உள்ள தொழிலாளர்களாக (Active Workers) உள்ளனர். இந்த அறிவிப்பானது வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. இந்த அறிவிப்பின் படி தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 100 நாள் வேலை திட்டத்தில் தினசரி ஊதியம் 319 ரூபாயிலிருந்து 336 ரூபாயாக உயர இருக்கிறது.
கிராமப்புற வறுமை ஒழிப்பிற்காக ஒன்றிய அரசு கடந்த 2005ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை (MGNREGA) இயற்றியது. இந்த சட்டத்தின் கீழ், 100 நாள் வேலைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஊரக வேலை உறுதித்திட்ட அட்டை வைத்திருப்பவர்கள் வேலை கோரினால் அந்த நபர்களுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 நாள் வேலை அளிக்கப்படும் என்ற உத்தரவாதத்தை இந்த திட்டம் அளிக்கிறது.
100 நாட்கள் வேலை தர அரசு (பஞ்சாயத்து அமைப்புகள்) தவறினால், பாதிக்கப்பட்டவருக்கு முதல் 30 நாட்களுக்கு சம்பளத்தில் கால் பங்கும், மேலும் தவறினால் பாதி ஊதியத்தை அபராதமாக அரசு தர வேண்டும். இத்திட்டத்தின் கீழ் 25.25 கோடி பேர் பதிவு செய்துள்ளனர். இதில், 14.35 கோடி பேர் செயலில் உள்ள தொழிலாளர்களாக (Active Workers) உள்ளனர்.
100 நாள் வேலை திட்டத்தில் வழங்கப்பட்டு வரும் ஊதியம் ரூ.319 ஆக உள்ளது. இதனை உயர்த்தி ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி 17 ரூபாய் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்டதன் மூலம் ரூ. 319 ஆக இருந்த 100 நாள் வேலை திட்ட ஊதியம் தற்போது ரூ.336 ஆக அதிகரித்து வழங்கப்படும் என்றும், ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் இந்த ஊதிய உயர்வு நடைமுறைக்கு வரும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
The post தமிழ்நாட்டில் 100 நாள் வேலைத் திட்டத்துக்கான ஊதியம் உயர்த்தி ஒன்றிய அரசு உத்தரவு appeared first on Dinakaran.