திருச்சி :திருச்சியிலிருந்து மதுரை வரையான தேசிய நெடுஞ்சாலையின் பராமரிப்பு பணி அதானியிடம் ஒப்படைக்கப்பட்டது. திருச்சி – துவரங்குறிச்சி- மதுரை வரையான 124 கி.மீ. சாலைப் பராமரிக்க தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் டெண்டர் கோரியது. அதானி ரோட் டிரான்ஸ்போர்ட், ஐஆர்பி இன்ஃப்ரா, எபிக் கன்செசன்ஸ், உள்ளிட்ட நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்றன. திருச்சி -மதுரை சாலையைப் பராமரிப்பதுடன் சுங்கம் வசூலித்துக் கொள்ளும் உரிமையைப் பெற அதானி ரோட் டிரான்ஸ்போர்ட் ரூ.4,692 கோடி தர முன்வந்தது. அதிகத் தொகைக்கு ஒப்பந்தம் கோரியுள்ள அதானி நிறுவனத்துக்கு நெடுஞ்சாலை ஆணையம் பணியை வழங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
The post திருச்சியிலிருந்து மதுரை வரையான தேசிய நெடுஞ்சாலையின் பராமரிப்பு பணி அதானியிடம் ஒப்படைப்பு!! appeared first on Dinakaran.