தூத்துக்குடி: “திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் கடல் அரிப்பைத் தடுக்க வல்லுநர்களைக் கொண்டு நீண்ட கால தீர்வுக காண்பதற்காகத் தான் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது” என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரை பகுதியில் கடல் அரிப்பினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக மீன்வளம் – மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, கனிமொழி எம்.பி. ஆகியோர் நேரில் பார்வையிட்டு இன்று (ஜன.18) ஆய்வு செய்தனர்.