புதுடெல்லி: ஊழலை பற்றி ராகுல் காந்தி பேசுவது, திருடன் காவலாளி வேடம் போடுவது போலாகும் என்று பாஜ தெரிவித்துள்ளது. அடுத்தாண்டு நடைபெற உள்ள அசாம் சட்ட பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும். அப்போது ஊழலில் புகார்கள் கூறப்படும் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா சிறைக்கு அனுப்பப்படுவார் என்று ராகுல் காந்தி நேற்று முன்தினம் தெரிவித்தார்.
இந்த நிலையில், பாஜ செய்தி தொடர்பாளர் சையத் ஸாபர் இஸ்லாம் நேற்று கூறுகையில், காங்கிரஸ் கட்சி தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியை தழுவி வருகிறது. ராகுல் காந்தி மீதும் ஊழல் வழக்குகள் உள்ளன. அவர் தற்போது ஜாமீனில் உள்ளார். இது திருடன் காவலாளி வேடம் அணிவது போல் உள்ளது.
ஹிமந்தா சர்மா மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட செல்வாக்கான தலைவர். அவருடைய ஆட்சியை மக்கள் அங்கீகரித்துள்ளனர். ராகுல் காந்தியின் பெருந்தன்மையால் அவர் முதல்வர் ஆகவில்லை.ராகுல் காந்தி, ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக பீகாரில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். தற்போது அசாமில் குழப்பம் ஏற்படுத்த ராகுல் முயற்சிக்கிறார். தேர்தல்களில் தோல்வியை மறைக்கவே அவர் இவ்வாறு செயல்படுகிறார் என்றார்.
The post திருடன் காவலாளி பணிபுரிவது போல் உள்ளது; ஊழலை பற்றி ராகுல் காந்தி பேசுவதா? பாஜ செய்தி தொடர்பாளர் கண்டனம் appeared first on Dinakaran.