திருப்பதி : திருப்பதி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் வெங்கடேஷ்வர் தலைமைதாங்கி பொதுமக்களிடம் இருந்த மனுக்களை பெற்று விசாரணை நடத்தினார். இதில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குவிந்து கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், சம்பந்தப்பட்ட மண்டல அதிகாரிகளுடன் காணொலி மூலம் தொடர்பு கொண்டு மனு விவரங்களை கேட்டறிந்து உடனடி தீர்வு காண உத்தரவிட்டார். பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு, ஆன்லைன் பதிவுடன் ரசீதுகள் வழங்கப்பட்டன.
கூட்டத்தில், வருவாய் துறை-201, சர்வே மற்றும் நிலங்கள்-10, நகராட்சி நிர்வாகம்-17, பதிவுகள் மற்றும் முத்திரைகள்-1, காவல்-16, பஞ்சாயத்து ராஜ்-24, சமூக நலம்-1, ஐசிடிஎஸ்-1, பள்ளிக் கல்வி-3, பஞ்சாயத்து ராஜ் பொறியாளர்-1, சிவில் சப்ளை-9, ஏ.பி.எஸ்.பி.டி.சி.எல். -2, ஊரக வளர்ச்சி-5, தேசிய நெடுஞ்சாலை-1, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி-1 என மொத்தம் 304 கோரிக்கைகள் பெறப்பட்டது.
அதேபோல் திருப்பதி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டத்தில், எஸ்பி ஹர்ஷவர்தன் ராஜூ உத்தரவின் பேரில் பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை கூடுதல் எஸ்பிக்கள் ரவி மனோகராச்சாரி, நாகபூஷணம் ஆகியோர் பெற்றனர். அதன்படி மொத்தம் 95 புகார் மனுக்கள் பெறப்பட்டது.
அப்போது, பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், பெண்களின் பிரச்னைகள் குறித்து உடனுக்குடன் ஆய்வு செய்து அவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வர முடியாதவர்கள் அருகிலுள்ள காவல் நிலையம், வட்ட அலுவலகங்கள் மற்றும் உட்கோட்ட அலுவலகங்களில் புகார் அளிக்கலாம். அவை மக்கள் குறை தீர்வு புகாராக கருதப்படும் என அதிகாரிகள் கூறினார்கள்.
The post திருப்பதி கலெக்டர், எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் மனுக்கள் ஆன்லைனில் பதிவு appeared first on Dinakaran.