ராமநாதபுரம்: மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது அசைவ உணவு உண்ட நவாஸ் கனி எம்.பி. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் தரணி முருகேசன் தனது கட்சியினருடன் சென்று, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலு வலகத்தில் நேற்று புகார் அளித்தார்.
இதுகுறித்து பாஜக மாவட்டத் தலைவர் தரணி முருகேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நவாஸ் கனி எம்.பி. இந்துக்களின் புனித தலமான திருப்பரங்குன்றம் மலை மீது ஏறி தனது உடன் வந்தவர்களுடன் அசைவ உணவு சாப்பிட்டுள்ளார். மலை மீது ஏறும்போது அங்கிருந்த போலீஸாரை மிரட்டும் தொனியில் அசைவ உணவு கொண்டு சென்று சாப்பிடலாமா, அசைவ உணவு மேலே கொண்டு வருபவர்களை தடுக்கக் கூடாது என பேசியுள்ளார்.