மதுரை: திருமங்கலம் – ராஜபாளையம் நான்கு வழிச்சாலை பணியால் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் சுரங்கப்பாதை வசதி கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். அவருக்கு ஆதரவாக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் 3 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டார்.
திருமங்கலம் – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் நான்கு வழிச்சாலை அமைப்பதற்கான பணிகள்தொடங்கப்பட்டு தற்போது திருமங்கலம் – ராஜபாளையம் சாலையில் பணிகள் நடைபெற்று வருகிறது. அதில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டி கிராமத்தில் சாலையின் ஒருபுறம் அரசு பள்ளிக்கூடம்,ரேஷன் கடை மற்றும் கூட்டுறவு கடன் சங்கம் அரசுடமையாக்கப்பட்ட வங்கி செயல்பட்டு வருகிறது. மறுபுறத்தில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கிராமத்தில் உள்ளது.