திருமணம் செய்து கொள்வதாக உறுதிமொழி அளித்து, ஒரு பெண்ணின் சம்மதத்தோடு உடலுறவு கொண்ட பின்னர், காரணங்கள் ஏதுமின்றி திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது சட்டப்படி குற்றமாகுமா? அவ்வாறெனில், பாலியல் வன்புணர்வு நடந்திருப்பதாக வழக்குப் பதிவு செய்ய முடியுமா? இந்தக் கேள்வி எழுவதற்குக் காரணம், உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் நடந்த ஒரு வழக்கு.